பட்டாசு விற்பனைக் கடையில் தீ: ஐந்து வாகனங்கள் சேதம்

செராஸ், பிப்.12-

சிலாங்கூர், Dataran Perniagaan Cheras, Jalan Dataran Cheras 6றில் நேற்றிரவு பட்டாசு விற்பனைக் கடையொன்றில் பரவிய தீயில் ஐந்து வாகனங்கள் சேதமடைந்தன. அச்சம்பவம் தொடர்பில் தங்களுக்கு இரவு 9.53 மணியளவில் அழைப்பு கிடைத்ததாக சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புத்துறையின் நடவடிக்கை உதவி இயக்குனர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார்.

தகவல் கிடைத்து Bandar Tun Hussein Onn தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் 13 வீரர்களும் மூன்று லாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் கூறினார். அத்தீயில் Toyota Vellfire, Perodua Bezza, Proton Saga கார்களும் இரு மோட்டார் சைக்கிள்களும் சேதமுற்றன. அச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீக்கான காரணம் ஆராயப்பட்டு வருவதாக Ahmad Mukhlis குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS