கோலாலம்பூர், பிப்.12-
2024 ஆம் ஆண்டு SPM தேர்வு சுமூகமாக நடைபெற்று முடிந்ததாக கல்வியமைச்சு கூறியிருக்கிறது. நாடு முழுவதும் 3,337 மையங்களில் இருந்து 402, 956 பேர் அத்தேர்வுக்கு அமர்ந்தனர். வட கிழக்கு பருவ மழை காரணமாக சில மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டிருந்தாலும், SPM தேர்வு தங்கு தடையின்றி சிறப்பாகவே நடந்ததாக அமைச்சு குறிப்பிட்டது.
கடந்தாண்டு டிசம்பர் 2 ஆம் தேதியில் இருந்து இவ்வாண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி வரை அத்தேர்வு சுமூகமாக நடைபெற பேரிடர் நிர்வாக தரப்புகள், அரசாங்கத் துறைகள் நிறுவனங்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் பேருதவியாக இருந்ததை அமைச்சு பாராட்டியது. அதே சமயம் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், பொது மக்கள் என கடமையில் ஈடுபட்ட ஒரு லட்சத்தும் மேற்பட்ட தேர்வுப் பணியாளர்களுக்கு அது நன்றி தெரிவித்துக் கொண்டது.
தேர்வுக்கு அமர்ந்தவர்களுக்கும் கல்வியமைச்சு வாழ்த்துகளைத் தெரிவித்தது.