கோலாலம்பூர், பிப்.12-
செப்டம்பர் மாதத்தின் கடைசி சனிக்கிழமை இனி மலேசியாவைக் கழுவும் நாளாக அனுசரிக்கப்படும் என வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் Nga Kor Ming தெரிவித்திருக்கிறார். கழிவுகளால் ஏற்படும் தூய்மைக்கேட்டு பிரச்னைகளைக் களைவதும், பொது இடங்களின் தூய்மை மீதான விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்துரைப்பதும் இதன் நோக்கமாகும்.
அதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து விட்டதகாவும் நாடு முழுவதும் அம்முயற்சி முன்னெடுக்கப்படும் என்றும் Nga Kor Ming கூறினார். கல்வியமைச்சின் ஒத்துழைப்பின் வாயிலாக மாணவர்களும் பங்கேற்கும் வகையில் இவ்வாண்டு ஒரு லட்சம் பங்கேற்பாளர்களை ஈர்க்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சுகள், துறைகள், கூட்டரசு நிறுவனங்கள், மாநில அரசுகள், ஊராட்சி மன்றங்கள், கல்வி நிலையங்கள், தனியார் அமைப்புகள் ஆகியவற்றின் இணக்கத்தையும் ஆற்றலையும் பொருத்து ஒட்டு மொத்த நிலையில் இந்த மலேசியாவைக் கழுவும் நாள் அமல்படுத்தப்படும் என அமைச்சர் விளக்கினார்.