ஜோகூர் பாரு, பிப்.12-
இம்மாதத் தொடக்கத்தில் தமது மாமியாரைக் கொலை செய்ததாக 51 வயது நபர் ஒருவர் மீது இன்று ஜோகூர் பாரு Majistrate நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. Majistrate Atifah Hazimah Wahab முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட நிலையில், Zuraidi Zakaria என்ற அந்த ஆடவர் தமது தலையை மட்டுமே ஆட்டினார். அவர் ஜோகூர் பாரு, Taman Sri Skudaiயில் Jalan Tembaga 10த்தில் உள்ள ஒரு வீட்டில் 79 வயதான Epah Daik என்ற மூதாட்டியைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இம்மாதம் 5 ஆம் தேதி பிற்பகல் 2.40 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்ததாகவும் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30தில் இருந்து 40 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை மற்றும் 12க்கும் குறையாத பிரம்படி தண்டனையாக விதிக்கப்படும். கொலைச் சம்பவம் என்பதால் எந்த மனுவும் பதிவு செய்யப்பட்டவில்லை. ஜாமீனும் வழங்கப்படவில்லை. இவ்வேளையில் மரபணு சோதனை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் ஏப்ரல் 28 ஆம் தேதியை நிர்ணயித்துள்ளது.