தைப்பிங் சிறைச்சாலையில் கைதி மரணம் தொடர்பில் தொடர்ந்து விசாரணை

சுங்கை பட்டாணி, பிப்.12-

கடந்த மாதம் தைப்பிங் சிறைச்சாலையில் தாக்கப்பட்டதாக நம்பப்படும் கைதி ஒருவர் மரணமடைந்தது தொடர்பிலான விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சம்பவம் நிகழ்ந்த அன்று கடமையில் இருந்த சிறைச்சாலை அதிகாரி உள்ளிட்ட தரப்பினரிடம் இருந்து விளக்கம் பதிவு செய்யப்பட்டு முழு அளவிலான விசாரணை நடத்தப்படுவதாக உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்தார்.

அதே சமயம் நாடாளுமன்றத்தின் சிறப்பு தேர்வு செயற்குழு அச்சம்பவம் குறித்து விளக்கம் பெற உள்துறை அமைச்சை அழைத்திருப்பதாகவும் அவர் கூறினார். இவ்வேளையில், மனித உரிமை ஆணையமான Suhakamமுன் தலைவர் Datuk Seri Mohamad HIshamudin Md Yunusசும் சம்பந்தப்பட்ட தரப்புகளை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக Saifuddin குறிப்பிட்டார்.

கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கைதி மரணம் தொடர்பில் புகார் கிடைத்து சித்ரவதை சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டதாக முன்னதாக பேரா மாநில இடைக்கால போலீஸ் தலைவர் DCP Zulkafli Sariaat கூறியிருந்தார்.

WATCH OUR LATEST NEWS