புத்ராஜெயா, பிப்.12-
மாணவர்கள் மத்தியில் ஆங்கிலமொழிப் புலமையை மேம்படுத்த உடனடி முயற்சிகளை எடுக்குமாறு பிரதமர் Datuk Seri Anwar Ibrahim கல்வியமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளார். அரசாங்கம் முடிவு செய்துள்ள கல்வி உருமாற்றுத் திட்டமிடல்களை நடைமுறைப்படுத்த நீண்ட காலம் எடுத்துக் கொள்ளக்கூடாது. விரைந்து செயல்படாவிட்டால், நாட்டின் கல்வி முறை பின் தங்கிவிடும் என பிரதமர் சுட்டிக் காட்டினார்.
மாணவர்களிடையே ஆங்கிலமொழி ஆற்றலை மேம்படுத்துவது கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒன்று. தேசிய மொழியை வலுயுறுத்தும் அதே வேளை ஆங்கிலமொழி ஆளுமையும் அவசியம் என Datuk Seri Anwar கூறினார். அம்முயற்சியைச் செயல்படுத்த விரைந்து யோசித்து, செயலாற்றக்கூடிய குழுவொன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்றாரவர்.
தேசிய மொழியை ஆக்ககரப்படுத்தும் வேளை, மலேசியர்கள் ஆங்கிலமொழியிலும் சிறந்திருக்க உதவும் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில் இருந்து அரசாங்கம் பின் வாங்காது என கடந்தாண்டு பிரதமர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது