மலேசிய அணியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஹாங்காங்

கோலாலம்பூர், பிப்.12-

தேசிய பேட்மிண்டன் அணி, இன்று சீனாவின் கிங்டாவோவில் நடைபெற்ற  ஆசிய கலப்பு அணி பூப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியை சற்று சுணக்கத்துடனே தொடங்கியிருக்கிறது. B குழுக்கான தொடக்க ஆட்டத்தில் அது ஹாங்காங்கிடம் 3-2 என்ற புள்ளிகளில் தோல்வி கண்டது. 
 
சீனாவின் கிங்டாவ் ஸ்போர்ட்ஸ் சென்டரில் நடந்த அவ்வாட்டத்தில், ஹாங்காங் தனது விளையாட்டாளர்கள் தேர்வை கவனமாகச் செய்ததால் தேசிய அணி ‘சிக்கிக் கொண்டது’ என்றே கூறலாம். இந்தோனேசியாவிடம் நேற்றைய 5-0 தோல்வியைப் போலல்லாமல், வோங் சூங் ஹான் உட்பட பல தேசிய பயிற்சியாளர்களால் வழிநடத்தப்பட்ட ஹாங்காங் குறிப்பாக கலப்பு இரட்டையர் மற்றும் ஆண்கள் ஒற்றையர் போட்டிகளில் மாற்றங்களைச் செய்தது. இது தெளிவாக முடிவுகளை அளித்தது. 

இந்த தோல்வியால் மலேசியாவுக்கு சற்று சவாலை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் இப்போது பி பிரிவில் கடைசி ஆட்டத்தில் இந்தோனேசியாவை தோற்கடிக்க வேண்டும் என்ற கடினமான சூழ்நிலைக்கு அது தள்ளப்பட்டுள்ளது. 
 
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த போட்டி 2017-ல் தொடங்கப்பட்டதில் இருந்து, மலேசியாவின் சிறந்த முடிவு காலிறுதி வரை சென்றதாகும். BAMTC ஆனது ஏப்ரல் மாதம் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள சுடிர்மான் கிண்ணத்திற்கான தகுதிப் போட்டியாகவும் உள்ளது. 

WATCH OUR LATEST NEWS