இயக்குனர் அட்லீ பாலிவுட்டில் நுழைந்து ஷாருக் கான் நடிப்பில் ‘ஜவான்’ என்ற படத்தை இயக்கி பெரிய வெற்றியை பெற்றார். அந்த படத்திற்கு பிறகு அவர் சல்மான் கான் உடன் கூட்டணி சேர இருப்பதாக கூறப்பட்டு வந்தது. அதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அந்த படம் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளி வந்திருந்தது.
மேலும் ரஜினிகாந்த் அல்லது கமல்ஹாசன் இதில் முக்கியக் கதாப்பாத்துரத்தில் நடிக்க போவதாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்த படம் கைவிடப்பட்டு விட்டதாக தற்போது பாலிவுட் ஊடகங்களில் வெளியாகி இருக்கும் செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அட்லீ அடுத்து அல்லு அர்ஜுன் உடன் கூட்டணி சேர போவதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.