மறைந்த பாடகர் எஸ்.பி.பி பெயரில் சாலை

இந்திய சினிமாவின் அடையாளமாக இருந்தவர் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி கொரோனா பெருந்தொற்று காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவு கோடிக்கணக்கான ரசிகர்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. தமிழ் நாடு முழுவதும் உள்ள பெரிய நகரங்கள், சிறு நகரங்கள், கிராமங்கள் என அனைத்து பகுதிகளிலும் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிலையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பெயரில் தற்போது சாலை திறக்கப்பட்டுள்ளது. 
 

சாலையின் பெயர் பலகையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். காம்தார் நகர் முதன்மை சாலைக்கு ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக, எஸ்.பி. பாலசுப்ரமணியன் மகன் எஸ்.பி.பி. சரண் பேசும்போது, இது எங்களுக்கு, எங்கள் குடும்பத்தினருக்கோ கிடைத்த அங்கீகாரம் என நான் கூற மாட்டேன். எஸ்.பி.பி. ரசிகர்களுக்கு கிடைத்த அங்கீகாரம். அப்பாவுக்கு ஒரு நினைவிடம் கட்டி வருகிறோம். அங்கு போனால் அவரது புகைப்படங்கள் தொடங்கி, அவர் வாங்கிய விருதுகள் வரை அனைத்தும் பார்க்கலாம். இது எல்லாம் அவரது ரசிகர்களுக்காக தான் செய்து வருகிறோம். இது எல்லாம் அவரது ரசிகர்களால் தான் நடக்கிறது என்றார். 
 
 

WATCH OUR LATEST NEWS