டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் வீட்டுக் காவல் குறித்த கூடுதல் ஆவணம் தொடர்பாக முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டான்ஶ்ரீ அகமட் தேரிருடின் முகமட் சாலேவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்க விண்ணப்பம் செய்யவுள்ளார்.
நாளை மறுநாளுக்குள் விண்ணப்பத்தை தாக்கல் செய்ய உள்ளதாக வழக்கறிஞர் டான் ஸ்ரீ முஹம்மது ஷாஃபி அப்துல்லா கூறினார்.
SRC இன்டர்நேஷனல் Sdn Bhd நிதியில் 42 மில்லியன் ரிங்கிட் மோசடி செய்ததற்காக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் வீட்டுக் காவலில் தனது எஞ்சிய சிறைத்தண்டனையை அனுபவிக்க அனுமதிக்கும் வகையில், 16வது மாமன்னரால் Titah Adendum அங்கீகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.