பாக்கெட் சமையல் எண்ணெய்க்கான மானியம் சாரா உதவித் திட்டம் மூலம் பணப் பரிமாற்றமாக மாற்றப்பட வேண்டும்

கோலாலம்பூர், பிப்.12-

பாக்கெட் சமையல் எண்ணெய்க்கான மானியத்தை ஒவ்வொரு மாதமும் SARA உதவித் திட்டம் மூலம் பணப் பரிமாற்றமாக மாற்ற வேண்டும் என்று நம்பிக்கைக் கூட்டணியைச் சேர்ந்த பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியான் சுங் பரிந்துரைத்தார். இது கசிவுகளையும் சிதறல்களையும் கட்டுப்படுத்த உதவும் என்று அவர் கூறினார்.

தற்போது பாக்கெட் எண்ணெய் மானியம் வழங்கும் முறை குறைந்த வருமானம் கொண்டவர்கள் பொருட்களைப் பெறுவதை கடினமாக்குகிறது. மேலும், மானியக் கட்டுப்பாட்டின் செயல்திறன் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று கேள்விகள் எழுப்பப்பட்டு விவாதங்கள் நடந்து வருகின்றன.

WATCH OUR LATEST NEWS