கோலாலம்பூர், பிப்.12-
Perumahan awam எனப்படும் பொது வீட்டுவசதி, Projek Perumahan Rakyat எனப்படும் மக்கள் வீட்டு வசதித் திட்ட வீடுகளின் உரிமையாளர்கள் தங்கள் வீடுகளை இலாபம் ஈட்டுவதற்காக மற்றவர்களுக்கு வாடகைக்கு விடும் நடவடிக்கைகள் உள்ளன என்பதை பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் சலிஹா முஸ்தபா ஒப்புக்கொண்டார்.
இந்த விவகாரத்தைச் சமாளிக்க, உள்ளூர் அதிகார மட்டத்தில் அவ்வப்போது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. மேலும், குடியிருப்பாளர் மற்றவர்களுக்கு வாடகைக்குக் கொடுப்பதைக் கண்டறிந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.