கோலாலம்பூர், பிப்.12-
மலேசியா இப்போது வடகிழக்கு பருவமழையின் இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த வானிலை மார்ச் இறுதியில் முடிவடையும். அதன் பின், வழக்கத்தை விட வெப்பமான, வறண்ட வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேக மூட்டமும் மழைப்பொழிவும் குறையும் என METMALAYSIA கணித்துள்ளது.
அக்காலக் கட்டத்தில், வெப்ப அலைகளும் உள்ளூர் புகைமூட்டமும் ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுமக்கள் நீர் பயன்பாட்டைச் சிக்கனப்படுத்தவும் எந்தவொரு திறந்தவெளி எரிப்பைத் தவிர்க்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.