சுங்கை பட்டாணி, பிப்.12-
கெடா சுங்கைப்பட்டாணியில் இயங்கிவரும் முத்தையாஸ் நிறுவனம் 1990 ஆம் ஆண்டுகளில் சுங்கைப்பட்டாணி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் தைப்பூச திருவிழாவில் 10,000 த்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானமும் சேவைகளும் வழங்கி வருவத்தாக அந்நிறுவனத்தின் தலைவர் வாசுதேவன் முத்தையா தெரிவித்தார் .
ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்திற்கு தன் தந்தையின் காலத்திலிருந்து பக்தர்களுக்கும் ஆலயத்திற்கும் சேவை வழங்கி வந்தார் அந்த சேவை தலைமுறையாக செய்து வருவத்தாக வாசுதேவன் குறிப்பிட்டார் .
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் சுங்கைப்பட்டாணி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் தைப்பூச திருவிழாவின் இரண்டாவதாக நாளின் இரத ஊர்வலத்தில் சுமார் 6000 த்திற்கு மேற்பட்டப் பக்தர்களுக்கு இரவு வழங்கினர் முத்தையாஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வாசுதேவன் சாந்தி குடும்பத்தினர்.