சுபாங் ஜெயா, பிப்.12-
நெகிரி செம்பிலான், கெனாபோயில், நாட்டில் இரண்டாவது tapir மறுவாழ்வு மையத்தை 2027 இல் திறக்க திட்டமிட்டுள்ளது. வனவிலங்கு, தேசிய பூங்காக்கள் பாதுகாப்புத் துறையான PERHILITAN இயற்கை வளங்கள் , சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மத்தின் தெரிவிக்கையில், மலேசியாவின் Tapir இன் எண்ணிக்கையைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.
Tapir இன் உயிர் வாழ்வுக்கு ஏற்படும் முக்கிய அச்சுறுத்தல்களில் ஒன்று வாகனங்களுடன் மோதுவது. மனிதர்கள் உண்மையில் Tapirகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என PERHILITAN குறிப்பிட்டது.
சிலாங்கூரில் உள்ள முதலாவது மையம் TAPIR அழிவதிலிருந்து பாதுகாக்க முக்கிய பங்கு வகிக்கிறது. Kenaboiயில் திறக்கப்பட உள்ள இரண்டாவது மையமானது பாதுகாப்பு முயற்சிகளை வலுப்படுத்தும் என்று PERHILITAN நம்பிக்கை தெரிவித்தது.