பெட்டாலிங் ஜெயா, பிப்.12-
சரவாக் மாநிலம், தனது சொந்த விமான நிறுவனமான AirBorneoவைக் கொண்டிருக்கும் என்று சரவாக் பிரீமியர் Abang Johari Openg அறிவித்தார். மாநில அரசு MASwings விமான நிறுவனத்தை கையகப்படுத்துவதன் மூலம் இது சாத்தியமானது என்றார்.
AirBorneo இணைப்பு, மலிவு கட்டணங்கள், சரவாக்கிற்கு பொருளாதார நன்மைகளுக்கு இடையே சமநிலையை உருவாக்கும். உயர்மதிப்பு மிக்க சுற்றுலா தலமாக சரவாக்கின் அந்தஸ்துக்கு முக்கியத்துவம் உயரும் என்றார்.
MASwings இன் மாற்றம் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும். மாற்றத்தின் போது MASwings வழக்கமாக செயல்படும், விமான அட்டவணை பாதிக்கப்படாது என்றார் Abang Johari.