தைப்பூசத் திருநாளில் யூரோ குழுமத்தின் தண்ணீர் பந்தல்: பக்தர்களுக்கு குளிர்ச்சியான நிவாரணம்

பத்துமலை, பிப்.12-

தைப்பூசத் திருநாளை முன்னிட்டு, Euro Group (Malaysia) Berhad நிறுவனம் பிரம்மாண்டமான தண்ணீர் பந்தலை அமைத்து பக்தர்களுக்கு பானங்களையும் உணவையும் அளித்தது. கடந்த 2012 முதல் இந்த நற்பணியை செய்து வருவதாகவும் இம்முறை சிங்கப்பூர் நிறுவனமான BHS Kinetic Pte Ltdஉம் இணைந்து கொண்டதாக Euro Group (Malaysia) Berhad நிறுவனத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரியான டத்தோ ஆனந்த் ராஜா தெரிவித்தார்.

தைப்பூசத்திற்கு முந்தைய நாளில் தேர் புறப்பாடின்போது 1,000 பேருக்கு அன்னதானமும் இலவச பானங்களும் வழங்கப்பட்டன. தைப்பூசத்தின்போது, இரண்டாயிரம் பேருக்கு அண்ணதானம் வழங்கப்பட்ட நிலையில், காலை முதல் இரவு வரை 10,000க்கும் மேற்பட்டவர்களுக்கு பானங்களும் வழங்கப்பட்டதாக டத்தோ ஆனந்த் ராஜா குறிப்பிட்டார்.

பக்தர்கள் வெப்பத்திலும், கூட்டத்திலும் களைப்படையாமல் இருக்க இந்த தண்ணீர் பந்தல் பேருதவியாக இருந்தது. தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொண்ட பினாங்கு மாநில முதலமைச்சர் இந்த தண்ணீர் பந்தலின் திறப்பு விழாவில் பினாங்கு முதலமைச்சர் Chow Kon Yeow கலந்து கொண்டு சிறப்பித்ததோடு, யூரோ குழுமத்தின் தண்ணீர் பந்தலையும் பார்வையிட்டர்.

வருகை புரிந்த பினாங்கு முதலமைச்சர், ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர், உட்பட இதர சிறப்பு வருகையாளர்களுக்கும் டத்தோ ஆனந்த ராஜா, பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பித்தார். இந்த நிகழ்வு யூரோ குழுமத்தின் சமூகப் பொறுப்புணர்வை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்தது. பக்தர்களின் வசதிக்காக செய்யப்பட்ட இந்த ஏற்பாட்டை முதலமைச்சர் வெகுவாகப் பாராட்டினர்.

யூரோ குழுமம் கடந்த 13 ஆண்டுகளாக தைப்பூசத் திருநாளில் பக்தர்களுக்காக தண்ணீர் பந்தல் அமைத்து சேவையாற்றி வருகிறது. வெப்பம் அதிகமாக இருந்ததால், தண்ணீர் பந்தல் ஒரு வரப்பிரசாதமாக இருந்தது என்று பக்தர்கள் கூறினர். குளிர்பானங்கள் தாராளமாகக் கிடைத்ததால், களைப்பு தெரியாமல் இறைவன் தரிசனம் செய்ய முடிந்தது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் பேசிய டத்தோ ஆனந்த் ராஜா, “பக்தர்களின் நலனுக்காகவும், திருவிழாவின் சிறப்பை மேம்படுத்தவும் யூரோ குழுமம் தொடர்ந்து பாடுபடும். இதுபோன்ற சமூகப் பணிகளில் ஈடுபடுவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது,” என்று கூறினார். யூரோ குழுமம் எதிர்காலத்திலும் இதுபோன்ற சமூக நலப் பணிகளைத் தொடரும் என்று அவர் உறுதியளித்தார்.

WATCH OUR LATEST NEWS