கோலாலம்பூர், பிப்.12-
Sistem Pengesanan Murid – SiPKPM எனப்படும் மாணவர் கண்காணிப்பு முறையை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் வலுப்படுத்தவுள்ளது கல்வி அமைச்சு. இதன் மூலம் பள்ளிக்கூடம் செல்லாமல் போகும் அபாயத்திலுள்ள மாணவர்களை முன்னதாகவே கண்டறிய முடியும் என துணைக் கல்வி அமைச்சர் வொங் கா வோ கூறினார்.
அனைத்து மாணவர்களும் தரமான கல்வியைப் பெறுவதை உறுதி செய்வதை இந்த அணுகுமுறை நோக்கமாகக் கொண்டுள்ளது. வருகை, இடைநிற்றல், தரமான கல்விக்கான அணுகல் போன்ற பிரச்சினைகளில் அமைச்சு சமரசம் செய்து கொள்ளாது என்றார் அவர்.