நாடு முழுவதும் 95 Jualan MADANI Koperasi Usahawan திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன

கோலாலம்பூர், பிப்.12-

நாடு முழுவதும் 95 Jualan MADANI Koperasi Usahawan திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 8.5 மில்லியன் ரிங்கிட் விற்பனை மதிப்பைப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் கிட்டத்தட்ட 25,000 தொழில்முனைவோருக்கு பயனளித்துள்ளது என இன்று நாடாளுமன்றத்தில் தொழில்முனைவோர் , கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோஶ்ரீ R.ரமணன் தெரிவித்தார்.

இத்திட்டத்தில் வழங்கப்படும் தள்ளுபடி, தொகை, இடம் உட்பட பல காரணிகளைப் பொறுத்தது என்று ரமணன் கூறினார். தமது தொகுதியான சுங்கை பூலோவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மடானி விற்பனையானது, நாடு முழுவதிலும் நடந்த அனைத்து மடானி விற்பனைகளிலே மிகவும் மலிவானது என்றும் 50 விழுக்காடு தள்ளுபடியுடன், நடைபெற்ற அந்த விற்பனைக்கானச் செலவைத் தாமே ஏற்றுக் கொள்வதாகவும் குறிப்பிட்டார். மேலும் தள்ளுபடி வேண்டுமென்றால், நமது நாடாளுமன்ற உறுப்பினர் ஒதுக்கீட்டில் இருந்து முயற்சி செய்யலாம் எனவும் அவர் மக்களவையில் கூறினார்.

கூட்டுறவு இயக்கத்தை மேம்படுத்த தமது அமைச்சு உறுதிபூண்டுள்ளாதாகக் கூறிய அவர், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன எனவும் இதில் வட்டியில்லாக் கடன் வசதிகளும் நிதி ஊக்கத்தொகையும் அடங்கும் என்றார்.

WATCH OUR LATEST NEWS