கோலாலம்பூர், பிப்.12-
அரசாங்கம் SSPA எனப்படும் அரசு ஊழியர் பணி ஓய்வுத் திட்டத்தில் நியாயமான அணுகுமுறையை எடுக்க வேண்டும் என்று பொதுச் சேவைத் துறை ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான CUEPACS கேட்டுக் கொண்டுள்ளது. SPM தேர்வை நிறைவு செய்யாத ஒப்பந்த ஊழியர்களின் சேவையைத் தொடர வேண்டாம் என்ற முடிவு நியாயமற்றது, மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சுமையாக உள்ளது என CUEPACS இன் தலைவர் டத்தோ அட்னான் மாட் தெரிவித்தார்.
நீண்ட காலமாகச் சேவை செய்த ஒப்பந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆறு வருட பணி அனுபவம் SSPA தரம் 1 இல் கணக்கில் கொள்ளப்பட வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். ஒப்பந்த ஊழியர்களின் நலன்களை நசுக்காத தீர்வுகளைக் காண அரசாங்கம் CUEPACS உடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அட்னான் அழைப்பு விடுத்தார்.