சிறை என்பது தண்டனைக்குரிய இடம் மட்டுமல்ல, சீர்திருத்தத்திற்கான இடமும் கூட: அமைச்சர் சைஃபுடின் நசுதியோன் இஸ்மாயில் பேச்சு

சுங்கை பட்டாணி, பிப்.12-

நேற்று, சுங்கை பட்டாணி சிறையில் தைப்பூசத்தை முன்னிட்டு 102 கைதிகளுக்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு குடும்பத்தினருடன் மீண்டும் ஒரு முறை சந்திக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. சிறை என்பது தண்டனைக்கான இடம் மட்டுமல்ல, சீர்திருத்தத்திற்கான இடமும் கூட என்பதை இந்த நிகழ்வு உணர்த்தியது என அந்நிகழ்ச்சிக்குப் பிறகான செய்தியாளர் சந்திப்பில் உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைஃபுடின் நசுதியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

மேலும், தைப்பிங் சிறையில் கைதி ஒருவர் இறந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறதாகவும் நாடாளுமன்றத் தேர்வுக் குழுவும், மனித உரிமைகள் ஆணையமும் விசாரணை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார். விசாரணை முறையாகவும், படிப்படியாகவும் நடைபெறும் என்று அமைச்சர் உறுதி அளித்தார்.

அதே சமயம், கெடாவில் பக்காத்தான் ஹராப்பானின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட அமைச்சர், பிப்ரவரி 15ஆம் தேதி கெடா ஒற்றுமை மாநாடு நடைபெறும் என்றார். தேர்தலில் போட்டியிடுவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS