2024 Y.R.4, சிறுகோள் பூமியில் மோதினால் அது எவ்வளவு அழிவை ஏற்படுத்தும், பூமியில் சிறுகோள் எப்போது மோதும், விண்வெளி ஏஜென்சிகள் இதுபோன்ற சூழ்நிலைகளை எவ்வாறு சமாளிக்க முயற்சிக்கின்றன என்பது குறித்து அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான NASA தற்போது முழு வீச்சில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
புதியதாக கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோள் – 2024 YR4 – 2032 இல் பூமியில் மோதுவதற்கு ஒரு விழுக்காட்டிற்கும் அதிகமான வாய்ப்பு உள்ளது என்று NASA அதிகாரிகள் கடந்த வாரம் தெரிவித்தனர்.
99 விழுக்காடு மோதல் நேராது. ஆனால் இது கவனத்திற்குரியது என்று பூமிக்கு அருகில் உள்ள பொருட்களை ஆய்வு செய்து வரும் அதன் இயக்குநர் Paul Sodas கூறுகிறார்.
2024 Y.R. 4 முதன்முதலில், கடந்த ஆண்டு டிசம்பரில் சிலியில், தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. பூமிக்கு அருகில் உள்ள சிறுகோள், ஒரு கால்பந்து மைதானம் போல பெரியது, 40 முதல் 100 மீட்டர் அகலம் கொண்டது.
Associated Press, அறிக்கையின்படி, இது கடந்த ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று பூமிக்கு மிக அருகில் வந்தது. பூமியிலிருந்து சுமார் 8 லட்சம் கிலோமீட்டர் தொலைவில், சந்திரனை விட இருமடங்கு தூரத்தில் கடந்து சென்றது.
அந்த சிறுகோள் அடுத்த சில மாதங்களில் பார்வையில் இருந்து மறைந்துவிடும், அது 2028 இல் மீண்டும் பூமியின் வழியைக் கடக்கும் வரை மீண்டும் பார்க்க முடியாது. அதனால்தான் உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் தற்போது 2024 Y. R. 4 சிறுகோளின் பாதை மற்றும் அளவை பார்வையில் இருந்து வெளியேறும் முன் அதன் சக்தியை தீர்மானிக்க, மிகவும் சக்திவாய்ந்த தொலைநோக்கிகளைப் பயன்படுத்துவதில் தீவிரமாக ஈடுபடுபட்டு வருகின்றனர் என்று Nasa கூறுகிறது.
எனினும் இந்த சிறுகோள், 2032 ஆம் ஆண்டு, பூமியைத் தாக்கும் அபாயம் இருப்பதை Nasa மறுக்கவில்லை.