ஜோகூர் பாரு, பிப்.13-
மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவர் ஒருவர், வாகனத்தால் மோதித் தள்ளப்பட்டு, மோட்டார் சைக்கிளுடன் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டதில் பரிதாபமாக மாண்டார்.
இச்சம்பவம், நேற்று பிற்பகல் 3.15 மணியளவில் ஜோகூர்பாரு – கோத்தா திங்கி சாலையின் 10 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.
63 வயது வாகனமோட்டி ஓட்டிச் சென்ற Four Wheel Drive வாகனம் ஒன்று திடீரென்று பிரேக் அழுத்தப்பட்டு, நிறுத்தப்பட்டதில் அந்த வாகனத்தில் மோட்டார் சைக்கிளுடன் மோதப்பட்ட முதியவர், பின்னால் வந்த மற்றொரு வாகனத்தினால் இழுத்துச் செல்லப்பட்டு மரணம் அடைந்ததாக செரி அலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் சோஹைமி ஈஷாக் தெரிவித்தார்.