மூவார், பிப்.13-
ஜொகூர், மூவாரில் கடந்த வாரம் 500 ரிங்கிட் கடனைச் செலுத்தத் தவறிய ஆடவரைத் தலைக்கவசத்தால் தாக்கிக் காயப்படுத்திய இரு நண்பர்களுக்கு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 9 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு புகிட் பாசீரில் அவ்விருவரும் சம்பந்தப்பட்ட ஆடவரைத் தாக்கியதாக மூவார் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் மாஜிஸ்ட்ரேட் ஃபாதின் டாலிலா காலிட் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
33 வயதான முகமட் ஷஸ்வான் அப்துல் அசிஸும் 31 வயதான முகமட் ஷுக்ரி ரஹ்மானும் தங்கள் மீதான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டனர். அதனை அடுத்து ஒருவருக்கு 6 மாத கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மற்றொருவருக்கு ஆயிரத்து 500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தைச் செலுத்தத் தவறினால் ஆறு மாத கால சிறைத் தண்டனையை அவர் அனுபவிக்க வேண்டும்.