முக்கிய மருத்துவமனைகளில் கட்டில்கள் பற்றாக்குறைக்குத் தீர்வு காணப்பட வேண்டும்

காஜாங், பிப்.13-

நாட்டிலுள்ள முக்கிய மருத்துவமனைகளில் கட்டில்கள் பற்றாக்குறைக்குத் தீர்வு காண சுகாதார அமைச்சு புதிய மருத்துவமனைகளைக் கட்டுவதைப் பரிசீலிக்க வேண்டும். நடப்பில் உள்ள வசதிகளையும் மேம்படுத்த வேண்டும் என சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா உத்தரவிட்டுள்ளார். சில முக்கிய மருத்துவமனைகளில் அதிகமான கட்டில்கள் தேவைப்படுகின்றன. நோயாளிகளுக்கு கட்டில்களை ஒதுக்க முடியாத சூழ்நிலையும் காணப்படுவதை அவர் சுட்டிக் காட்டினார்.

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் மேலும் அதிகமான புதிய அரசாங்க கிளினிக்குகளைக் கட்டுவதை சுகாதார அமைச்சு பரிலீசிக்க வேண்டும். அதன் வழி நியாயமான கட்டணத்தில் பொதுமக்களுக்கு பரவலான சுகாதார சிகிச்சை வசதியை ஏற்படுத்தித் தர முடியும் என சுல்தான் ஷாராஃபுடின் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS