சூதாட்டத் வலைத்தளங்களும் சூதாட்ட உள்ளடக்கங்களும் அகற்றப்பட்டன

கோலாலம்பூர், பிப்.13-

இம்மாதம் முதல் தேதி வரை சமூக ஊடகத் தளங்களில் 5,026 சூதாட்ட வலைத்தளங்களும் 224,403 சூதாட்ட உள்ளடக்கங்களும் அகற்றப்பட்டதாக தொடர்புத்துறை அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்திருக்கிறார். அனைத்து பயனர்களுக்கும் இணையக் கட்டமைப்புச் சூழல் பாதுகாப்பானதாகவும் நிலைத்தன்மையுடனும் இருப்பதை உறுதிச் செய்ய அந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் விளக்கினார்.

நாட்டில் ஒவ்வொரு சமூக ஊடகம் மற்றும் இணையத் தகவல் சேவைகள் குறைந்தது எட்டு மில்லியன் பதிவு செய்யப்பட்ட பயனர்களைக் கொண்டிருக்க வேண்டும், ஜனவரி 1 முதல் சட்டம் 588 இன் கீழ் விண்ணப்ப சேவை வழங்கல் வகுப்பு உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் MCMCயின் முயற்சிகளுக்கு ஏற்ப இது உள்ளது.

இணையம் வாயிலான சூதாட்ட நடவடிக்கைகள் அதிகரித்து வருவது, அதன் மீதான கண்காணிப்பு நடவடிக்கைகள், சட்ட அமலாக்கங்கள், இணையச் சேவை மற்றும் இலக்கயியல் ஊடகச் சேவை வழங்குனர்களுடனான ஒத்துழைப்பு தொடர்பில் மக்களவையில் கேட்கப்பட்டதற்கு ஃபாமி பாட்சீல் அவ்வாறு பதிலளித்தார்.

WATCH OUR LATEST NEWS