கோலாலம்பூர், பிப்.13-
துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ ஃபடிலா யூசோப் சென்ற வாகனத்திற்கு போக்குவரத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர்களுக்கு இடையூறு விளைவித்தது மற்றும் ஆபாச சைகையை காட்டியதாக விளம்பரம் நிறுவனம் ஒன்றின் கணக்கியல் நிர்வாகி ஒருவர் கோலாலம்பூர், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
28 வயது ஜோஷுவா சொங் தியேன் கிட் என்ற அந்த நிர்வாகி இரு குற்றச்சாட்களும் வெவ்வேறு நீதிபதிகள் முன்னிலையில் வாசிக்கப்பட்டது.
அந்த நபர் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் கோலாலம்பூர், தாமான் துன் டாக்டர் இஸ்மாயிலில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அந்த நபர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரியுள்ளார்.