விளையாட்டுத்துறை அதிகாரிகள் இருவர் கைது

ஜோகூர் பாரு, பிப்.13-

அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஜோகூர் மாநிலத்தின் விளையாட்டு சங்கத்தின் இரண்டு மூத்த அதிகாரிகள், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் கைது செய்யப்பட்டனர்.

60 வயது மதிக்கத்தக்க அந்த இரு நபர்கள், நேற்று புதன்கிழமை, மாலை 4 மணியளவில் ஜோகூர்பாருவில் உள்ள மாநில SPRM அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.

அந்த விளையாட்டு சங்கத்தின் தலைவர் என்று நம்பப்படும் மூத்த அதிகாரி, கடந்த 2023 லிருந்து 2025 ஆம் ஆண்டு வரையில் அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி வந்ததாக நம்பப்படுகிறது.

இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சிடமிருந்து பெறப்பட்ட 13 லட்சம் ரிங்கிட் மானியத்தின் ஒரு பகுதியை சங்கத்தின் விளையாட்டு நடவடிக்கைகள் எனக் கூறி சங்கத்தின் கணக்கிலிருந்து தமக்கு சொந்தமான கணக்கிலும் மகனின் கணக்கிலும் பணத்தை மாற்றும்படி சங்கத்தின் கெளரவ செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS