ஜார்ஜ்டவுன், பிப்.13-
பினாங்கு, தண்ணீர்மலை, ஸ்ரீ பாலதண்டாயுதப்பாணி கோவிலின் தைப்பூச உண்டியல் பணம் வரும் மார்ச் 7 ஆம் தேதி காலை 7 மணிக்கு பத்து ஊபான் சட்டமன்ற உறுப்பினர் கே. குமரேசன் முன்னிலையில் கோம்தார் கட்டடத்தின் 5 ஆவது மாடியில் எண்ணப்படும் என்று பினாங்கு இந்து அறப்பணி வாரியம் தெரிவித்துள்ளது.
உண்டியல் பணம் எண்ணுவதற்கு மூன்று வார கால இடைவெளி எடுத்துக் கொள்வது பணத்தை வங்கியில் சேர்ப்பதிலும், பணத்தை எண்ணுவதற்கு பாதுகாப்பு சாதனங்கள் பயன்படுத்துவதிலும் வசதியின்மை காரணமாக இந்த மூன்று வார கால அவகாசத்தை எடுத்துக்கொள்வதாக அறப்பணி வாரியத்தின் ஆணையர் குமரேசன் தெரிவித்தார்.
வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதற்கு உண்டியல் பணம் பொது மக்கள் முன்னிலையில் எண்ணப்படும். இதற்கு 60 தன்னார்வலர்கள் தேவைப்படுகின்றனர். ஆர்வமுள்ளவர்கள், அவர்களின் தகுதியை அடிப்படையாக கொண்டு தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆர்வலர்கள், பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு குமரேசன் கேட்டுக்கொண்டுளளளார்.
அதேவேளையில் தைப்பூச விழா வெகுசிறப்பாக நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து தரப்பினருக்கும் இந்து அறப்பணி வாரியம் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக குமரேசன் குறிப்பிட்டார்