கெசுமாவின் இளைப்பாறும் கூடாரங்கள் பெரும் பங்காற்றியது

ஜார்ஜ்டவுன், பிப்.13-

பினாங்கு, தண்ணீர் மலை தைப்பூச விழாவில் மனித வள அமைச்சு, ஏற்படுத்திய பக்தர்களுக்கான இளைப்பாறும் கூடாரங்கள் முக்கியப் பங்கு வகித்ததாக பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் சுந்தராஜு சோமு தெரிவித்தார்.

மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் நேரடி வருகை தந்து, தைப்பூச விழாவில் கலந்து கொண்டது, மனித வள அமைச்சின் ஏற்பாட்டில் பல்வேறு சேவைகள் வழங்கப்பட்ட திட்டத்தில் அமைச்சருடன் இணைந்து தாமும் கலந்து கொண்டு, தொண்டாற்றியது, இந்த பக்தி விழாவில் மன நிறைவை தந்ததாக டத்தோஸ்ரீ சுந்தராஜு குறிப்பிட்டார்.

மடானி அரசாங்கத்தின் கோட்பாட்டிற்கு இணங்க, பல இன மக்களிடையை ஒற்றுமையைப் வலுப்படுத்தும் விழாவாகவே பினாங்கு தைப்பூச விழா அமைந்தது என்று பிறை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சுந்தராஜு வர்ணித்தார்.

WATCH OUR LATEST NEWS