கோலாலம்பூர், பிப்.13-
கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதியுடன் நிறைவு பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான SPM தேர்வில் 8,076 மாணவர்கள், அனைத்து சோதனைகளிலும் அமரவில்லை என்று கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களில் 6,231 பேர், கல்வி அமைச்சின் அரசாங்கப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர் என்று நாடாளுமன்ற அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
வேலைக்கு செல்லுதல், குடும்பப் பிரச்னை, உடல் நலக்குறைவு, மரணம், வெளிநாட்டிற்கு இடம் மாறிச் சென்றது முதலிய காரணங்களால் அவர்கள் இத்தேர்வை எழுத தவறியிருக்கலாம் என்று கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.