பவளப்பாறைகள் திட்டுகள் மலேசியாவில் வெகுவாகக் குறைந்தன

கோலாலம்பூர், பிப்.13-

மலேசிய கடப்பகுதிகளில் பவளப்பாறைகள் திட்டுகள் வெகுவாக குறைந்தது விட்டதாக Reef Check Malaysia எனும் அரச சாரா இயக்கம் தெரிவித்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டில் 45.87 விழுக்காடாக இருந்த பவளப்பாறைத் திட்டுகள், கடந்த ஆண்டில் 44.65 விழுக்காடாக குறைந்துள்ளது என்று அந்த இயக்கம் தனது 2014 ஆம் ஆண்டுக்கான அறிகையில் குறிப்பிட்டுள்ளது.

மலேசியாவில் 300 க்கும் மேற்பட்ட இடங்கள் பவளப்பாறைத் திட்டுகளுக்கு உரிய பகுதியாக அ டையாளம் காணப்பட்டு இருந்தன. சுற்றுலா நடவடிக்கைகள், தூய்மைக்கேட்டு மற்றும் மீன்பிடி நடவடிக்கைகள் முதலிய காரணங்களினால் பவளப்பாறைகள் திட்டுகளின் எண்ணிக்கை பெருவாரியாக குறைந்து வருகிறது என்று அந்த அமைப்பின் நிர்வாக தலைமை அதிகாரி Julian Hyde கவலைத் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS