மனநலப் பாதிப்பைப் போல் நடித்த வெளிநாட்டு தம்பதியர் கைது

பெட்டாலிங் ஜெயா, பிப்.13-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இடையூறு விளைவித்தற்காக ஏர் ஆசியா விமானத்தில் பயணிப்பதிலிருந்து வெளியேற்றப்பட்ட ஒரு சீன தம்பதியர், நல்ல மனநிலையில் உள்ளனர் என்பது மருத்துவப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அத்தம்பதியர் கைது செய்யப்பட்டனர்.

விமானத்தில் இடையூறு விளைவித்தப் பின்னர் சட்ட நடவடிக்கைக்கு தாங்கள் இலக்காகக்கூடும் என்று கருதிய கணவனும், மனைவியும் மன நலம் பாதிக்கப்பட்டவர்களைப் போல் நடிக்கத் தொடங்கினர்.

எனினும் அத்தம்பதியர், செர்டாங் மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்பட்ட போது, அவர்கள் மனோரீதியாக ஆரோக்கியமாக உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அதன் பின்னர் அவ்விருவரும் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று KLIA போலீஸ் தலைவர் Alnbany Hamzah தெரிவித்தார்.

பொது இடத்தில் மக்களுக்கு இடையூறு விளைவித்த சட்டத்தின் கீழ் அத்தம்பதியர் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS