பெட்டாலிங் ஜெயா, பிப்.13-
சுங்கை பூலோ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சொஸ்மா கைதிகளில் ஒருவர், கடுமையாகத் தாக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை உள்துறை அ மைச்சர் டத்தோஶ்ரீ சைபுடின் நசுதியோன் இஸ்மாயில் மறுத்துள்ளார்.
2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் ஒருவர் தாக்கப்பட்டதாக அவரின் மனைவி போலீசில் புகார் செய்து இருப்பது, அவரின் புகார் தொடர்பாக வெளியிடப்பட்ட காணொளியில் அவர் உரையாடியிருப்பதை தாமும் பார்த்ததாக சைபுடின் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக சிறைச்சாலை தலைமை இயக்குநர் டத்தோஶ்ரீ மொர்டின் முகமட்டைத் தொடர்பு கொண்டு விவரம் கேட்டதாக அவர் குறிப்பிட்டார்.
எனினும் அப்படியொரு தாக்குதல் சம்பவம், சுங்கை பூலோ சிறைச்சாலையில் நிகழவில்லை என்று தலைமை இயக்குநர் தெரிவித்ததாக சைபுடின் விளக்கினார்.
எனினும் இவ்விவகாரம் குறித்து அந்த கைதியின் மனைவி போலீஸ் புகார் செய்து இருப்பதால், மறைப்பதற்கு ஒன்றுமில்லை. இவ்விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்துவர் என்று சைபுடின் உறுதி அளித்தார்.