கோத்தா கினபாலு, பிப்.14-
போக்குவரத்து நிறுவனம் ஒன்றிடம் ஒரு லட்சம் ரிங்கிட் லஞ்சம் கேட்டதாக சந்தேகிக்கப்படும் அமலாக்க அதிகாரி ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது.
சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சொந்தமான லோரிகள் சாலையில் புரியும் குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு அந்த அமலாக்க அதிகாரி, லஞ்சம் கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு 8 மணியளவில் சபா எஸ்பிஆர்எம் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்ட அந்த அதிகாரி, விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளதாக எஸ்பிஆர்எம் வட்டாரங்கள் கூறுகின்றன.