குவாந்தான், பிப்.14-
உணவு விநியோக வர்த்தகப் பெண் மணி ஒருவர், கொலை செய்யப்பட்ட நிலையில் குவாந்தான், தஞ்சோங் லும்பூர் பாலத்திற்கு அருகில் சுங்கை குவாந்தான் ஆற்றோரத்தில் பிணமாகக் கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
உள்ளூரைச் சேர்ந்த 37 வயது மாதுவின் உடல், நேற்று மதியம் 12.45 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டு, போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதாக குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் வான் முகமட் சஹாரி வான் பூசு தெரிவித்தார்.
கொலை நடந்த இடத்திலும், மாதுவின் உடலிலும் நடத்தப்பட்ட தடயவியல் சோதனையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அந்த மாது குவாந்தானைச் சேர்ந்தவர் என அடையாளம் கூறப்பட்டுள்ளது.
சவப்பரிசோதனைக்காக அவரின் உடல் குவாந்தான், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வான் சஹாரி தெரிவித்தார்.