பத்துமலை, பிப்.14-
இவ்வாண்டு பத்துமலை தைப்பூச விழாவின் போது பெறப்பட்ட உண்டியல் காணிக்கைப் பணம், நாளை பிப்ரவரி 15 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு, முதல் முறையாக, பத்துமலைத் திருத்தலத்தில் ஸ்ரீ மகா துர்க்கை அம்மன் கோவிலில் பொது மக்கள் முன்னிலையில் எண்ணப்படும் என்று கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் நடராஜா அறிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் சேவையாற்றியவர்கள், இவ்வாண்டும் தங்கள் சேவையை வழங்கிடவும், பொது மக்கள் முன்னிலையில் உண்டியல் காணிக்கைப் பணம் எண்ணப்படுவதற்கும் தங்கள் ஒத்துழைப்பை நல்குமாறு டான்ஸ்ரீ நடராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.
தவிர, பத்துமலை தைப்பூச விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் தேவஸ்தானத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக டான்ஸ்ரீ நடராஜா தெரிவித்துள்ளார்.