குவாந்தான், பிப்.14-
உணவு விநியோக வர்த்தகப் பெண்மணி ஒருவர், கொலை செய்யப்பட்ட நிலையில் குவாந்தான், தஞ்சோங் லும்பூர் பாலத்திற்கு அருகில் சுங்கை குவாந்தான் ஆற்றோரத்தில் நேற்று பிணமாக கிடந்தது தொடர்பில் இந்த கொலையில் தொடர்புடையவர் என்று நம்பப்படும் சந்தேகப் பேர்வழியை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர் என்று பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோ யாயா ஒத்மான் தெரிவித்துள்ளார்.
குவாந்தான் வட்டாரத்தைச் சேர்ந்த 37 வயதுடைய அந்த சந்தேகப் பேர்வழியை பிடிப்பதற்கு தற்போது முழு வீச்சில் தேடப்பட்டு வருகிறார் என்று டத்தோ யாயா குறிப்பிட்டார்.
பல்வேறு குற்றப்பதிவுகளைல் கொண்டுள்ள அந்த நபர், கொலையுண்ட மாதுவுடன் உறவு ரீதியாக எந்த தொடர்பு இல்லை என்ற போதிலும் ஒரு பிள்ளைக்கு தாயாரான 37 வயது மாதுவை உணவு விநியோகம் தொடர்பில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வரும்படி அந்நபர் குறுந்தகவல் அனுப்பியிருப்பது, கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அந்த மாதுவின் தங்கச் சங்கிலியைக் காணவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.