சிரம்பான், பிப்.14-
தனது 6 வயது வளர்ப்புப் பேரனை ஓரினப்புணர்ச்சி புரிந்ததாக முதியவர் ஒருவர், சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
60 வயதுடைய அந்த நபர், நீதிபதி டத்தின் சுரிதா பூடின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவருக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த ஜனவரி மாதம் முதல் இம்மாதம் முற்பகுதி வரை சிரம்பானில் உள்ள ஒரு வீட்டில் அந்த முதியவர் இக்குற்றத்தைப் புரிந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.