குவாந்தான், பிப்.14-
ரமலான் புனித மாதத்தில் பகாங் மாநிலத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அரசு ஊழியர்களின் வேலை நேரம், மதியம் 12.30 வரை மட்டுமே என்று மேன்மை தங்கிய பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா அறிவித்துள்ளார்.
ரமலான் மாதத்தில் அரசு ஊழியர்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரத்தை செலவிடவும், வெள்ளிக்கிழமையின் புனிதத்தை மேன்மையுற செய்யவும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சுல்தான் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற்ற பகாங் மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் இம்முடிவு அங்கீகரிக்கப்பட்டு இருப்பதை சுல்தான் சுட்டிக்காட்டினார்.