ஈப்போ, பிப்.14-
அரசாங்கம் அறிவித்த 1,700 ரிங்கிட் குறைந்த பட்சம் சம்பள முறை, இம்மாதம் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய சம்பள முறையை அமல்படுத்த தவறும் முதலாளிகளுக்கு எதிராக புகார் செய்வதில் பயப்பட வேண்டாம் என்று தொழிலாளர்களை மலேசிய சோஷலிச கட்சியான PSM கேட்டுக்கொண்டுள்ளது.
முதலாளிகள் புதிய சம்பள முறையை அமல்படுத்த மறுப்பார்களேயானால் எந்தவோர் ஆள்பல இலாகா அலுவலகத்திலோ அல்லது PSM கட்சியிடமோ புகார் செய்யத் தயங்க வேண்டாம் என்று PSM கட்சியின் தொழிலாளர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் R. சரத்பாபு ராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.
குத்தகை முறையில் அரசாங்க வளாகங்களில் பாதுகாவல் பணியில் ஈடுபட்டு வருகின்றவர்கள், தோட்டக்காரர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு 1,700 புதிய சம்பள முறை அமல்படுத்தப்படவில்லை என்று சில புகார்களை PSM கட்சி பெற்று இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.