ரந்தாவ் ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா

ரந்தாவ், பிப்.14-

நெகிரி செம்பிலான், ரந்தாவ், ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா, கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

காலையில் பக்தர்கள் அனைவரும் பால்குடம் எடுத்து, முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனை செய்தனர்.

ஹோமம் பூஜைகளுக்கு பிறகு மதியம், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். 400-க்கும் மேற்பட்ட மக்கள் திரளாக கலந்து கொண்டு முருகப்பெருமானின் அருளாசியைப் பெற்றனர்.

சிறப்பு விருந்தினர்களாக பிரதமர் அலுவலகத்தின் சிறப்பு செயல் அதிகாரி ஷண்முகம் மூக்கன், நெகிரி செம்பிலான் மாநிலத்தின் முன்னாள் துணை சபாநாயகர் டத்தோ ரவி ,நெகிரி செம்பிலான் மாநிலத்தின் இந்து சங்க தலைவர் சிவஶ்ரீ டாக்டர் கோபி குருக்கள் ,தொழிலதிபர் டாக்டர் R.V. ஷியாம் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

வருகை புரிந்த சிறப்பு விருந்தினர்களை கோயில் தலைவர் நாராயணன் ,செயலாளர் டத்தோ ஆறுமுகம், பொருளாளர் நாதன் மற்றும் கோயில் நிர்வாக உறுப்பினர்கள் அனைவரும் வரவேற்றார்கள்.

கோயிலின் கட்டிட திருப்பணிகள் வெகுவேகமாக முடித்திட உதவிகள் செய்வதாக பிரதமரின் சிறப்பு செயல் அதிகாரி ஷண்முகம் மூக்கன் உறுதியளித்தார். மற்றும் புதிய நிர்வாகிகள் சிறப்பான சேவையை செய்து வருவதாக அவர் வெகுவாக பாராட்டினார்.

டாக்டர் கோபி குருக்கள் கூறும் போது கோயில் நிர்வாகத்தினர் சிறப்பான சேவையை செய்து வருவதாகவும் இந்து சங்கம் எல்லா நற்காரியங்களுக்கும் துணையிருக்கும் என்று கூறி நிர்வாகத்தினர்களை வெகுவாக பாராட்டினார்.

அன்னதான ஏற்பாடுகளை வழக்கறிஞர் வேல் மனோகரன் மற்றும் ரந்தாவ் ஸ்ரீபாலதண்டாயுத பாணி ஆலயத்தின் கெளரவ ஆலோசகர் தொழிலதிபர் டாக்டர் R.V.ஷியாம் பிரசாத் ஆகியோர் செய்திருந்தனர்.

வருகை புரிந்த அனைவருக்கும் கோயில் தலைவர் தநாராயணன் நிர்வாக உறுப்பினர்களின் சார்பாக நன்றி கூறினார்.

WATCH OUR LATEST NEWS