குவாந்தான், பிப்.14-
உணவு விநியோக வர்த்தகப் பெண்மணி ஒருவர், மிக கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் குவாந்தான், தஞ்சோங் லும்பூர் பாலத்திற்கு அருகில் சுங்கை குவாந்தான் ஆற்றோரத்தில் நேற்று பிணமாக கிடந்தது தொடர்பில் இந்த கொலையில் தொடர்புடையவர் என்று நம்ப்படும் சந்தேகப் பேர்வழி விரைந்து கைது செய்யப்பட வேண்டும் என்று மேன்மை தங்கிய பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா கேட்டுக்கொண்டார்.
மிக கொடூரமான முறையில் நடந்த இந்த கொலை, ஒரு மனிதாபிமானமற்ற செயல் என்று சுல்தான் வர்ணித்தார்.
37 மாதுவின் உடல் அனுமதிக்கப்பட்டுள்ள குவந்தான், தெங்கு அம்புவான் அஃசான் மருத்துமனையின் தடயவியல் பிரிவிற்கு இன்று காலையில் வருகை தந்த பகாங் சுல்தான் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
பாதிக்கப்பட்ட மாதுவின் கணவர் ஆராய Muhammad Afiq Aklmal என்பவரை நேரில் சந்தித்து சுல்தான், தமது ஆறுதலை தெரிவித்துக்கொண்டார்.
இந்த கொலை தொடர்பில் குவந்தானை சேர்ந்த 37 வயது நபரை போலீசார் தேடி வருகின்றனர்.