தெலுக் இந்தான், பிப்.14-
கடந்த ஜனவரி 28 ஆம் தேதி, தெலுக் இந்தான், ஜாலான் சுல்தான் அப்துல்லா, Hoover Park-கில் உள்ள தனது வீட்டின் முன்புறம், விற்பனைக்காக பூமாலைகளைத் தொடுத்துக் கொண்டு இருந்த, ஒரு இந்திய மாதுவை மடக்கி தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிய 40 வயது ஆடவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட ஆடவர், கடந்த பிப்ரவரி 5 ஆ ம் தேதி இரவு 10 மணியளவில் ஜாலான் சுங்கை மானிக் பகுதியில் கைது செய்யப்பட்டதாக கீழ் பேரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அகமட் அட்னான் பஸ்ரி தெரிவித்தார்.
காலை நேரத்தில் வீட்டின் முன் நிகழ்ந்த இந்த வழிப்கொள்ளைச் சம்பளம் தொடர்பான காணொளி வைரலானதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழியை போலீசார் அடையாளம் கண்டதாக அவர் குறிப்பிட்டார்.
வாகன இழுவைப் பணியாளரான அந்த நபர், கேபல்கள் திருட்டு மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் மூன்று குற்றப்பதிவுகளைக் கொண்டுள்ளதாக ஏசிபி அகமட் அட்னான் தெரிவித்தார்.