சுங்கை சிப்புட், பிப்.14-
சுங்கை சிப்புட் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய தேவஸ்தான பரிபாலன சபா, திருக்கோவிலில் தைப்பூச விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தைப்பூசத் திருவிழாவையொட்டி கோல கங்சார் நகராண்மைக் கழகத்தின் சுங்கை சிப்புட் கிளையின் உறுப்பினர்கள் மற்றும் சுங்கை சிப்புட் அன்பே வா நட்பு வட்டாரத்தின் இணை ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தல், பக்தர்களின் கவன ஈர்ப்பாக அமைந்தது.
தைப்பூச விழா முதல் நாள் இரவு தொடங்கி, மறுநாளை காலை 4 மணி வரை கிட்டத்தட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தேநீர், நெஸ்காபி, மைலோ போன்ற சூடான பானங்களைத் தாங்கள் வழங்கியதாக 7 ஆவது ஆண்டாக தண்ணீர் பந்தலை ஏற்பாடு செய்த கோலகங்சார் நகராண்மைக்கழக உறுப்பனர்கள் சுங்கை சிப்புட் கிளையின் பொறுப்பாளர் நடராஜன் விவரித்தார்.
பக்தர்கள் மட்டுமன்றி, பிற இனத்தவர்களும், சுற்றுப்பயணிகளும் மதவேறுபாடுயின்றி தங்களின் தண்ணீர் பந்தலுக்கு வருகை தந்து, தங்களின் ஒற்றுமையை புலப்படுத்தியது மகிழ்ச்சியை அளிக்கிறது என்று நடராஜா குறிப்பிட்டார்.
சுங்கை சிப்புட் அன்பே வா நட்பு வட்டாரத்தின் பொறுப்பாளரும், நிகழ்விற்கு பெரும் ஆதரவு தந்தவருமான மணிமாறன் கிருஷ்ணன் கூறுகையில் கோலகங்சார் நகராண்மைக்கழக உறுபினர்களுடன் இணைந்து தண்ணீர் பந்தலை ஏற்படுவது செய்ததற்கு அந்த இயக்கத்துக்கு தமது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டார்.
தண்ணீர் பந்தலை வெற்றிகரமாக நடத்துவதற்கு உதவிய மணிமாறன், மைக்கேல் மற்றும் கோலகங்சார் நகராண்மைக்கழக உறுப்பினர்கள் இயக்கத்தின் ஏற்பாட்டுக் குழுவினருக்கு நடராஜன் தமது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.