ஈப்போ, பிப்.14-
பேரா, ஜாலான் சுங்கை சிப்புட் , கந்தான் தொழில்பேட்டை பகுதியில் இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒரு நபர், கடும் காயங்களுக்கு ஆளாகினார்.
இச்சம்பவம் இன்று மதியம் 12.01 மணியளவில் நிகழ்ந்தது. மூத்தக் குடிமக்களான அந்த இருவரும் பயணம் செய்த கார், சாலையை விட்டு விலகி மரத்தில் மோதியதாக பேரா மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார்.
இதில் 65 வயது மூதாட்டி சம்பவ இடத்திலேயே மாண்டார். 74 வயது நபர் காரின் இடிப்பாடுகளில் சிக்கிய நிலையில் பிரத்தியேக சாதனங்களின் உதவியுடன் மீட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.