பெட்டாலிங் ஜெயா, பிப்.14-
லஞ்ச ஊழல் மற்றும் 26 லட்சம் ரிங்கிட் போலி பண கோரல்கள் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆ ணையம் மேலும் இருவரைக் கைது செய்துள்ளது.
ஒரு பெண்ணும், ஓர் ஆணும், இன்று புத்ராஜெயா, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, இருவரையும் வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி வரையில் தடுத்து வைப்பதற்கான அனுமதியை SPRM பெற்றது.
40 வயது பெண்ணும், 60 வயது ஆணும் நேற்று வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு மேல் கைது செய்யப்பட்டனர்.
இருவரும் பங்கு சந்தையில் இடம் பெற்றுள்ள நிறுவனம் ஒன்றின் நிர்வாக தலைமை அதிகாரியாகவும், நிறுவன இயக்குநராகவும் உள்ளனர்.