பெட்டாலிங் ஜெயா, பிப்.14-
கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி புதன்கிழமை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் KLIA 2இல் ஆபாச செயலில் ஈடுபட்டு, இடையூறு விளைவித்த குற்றத்தற்காக சீன நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதியர், சிப்பாங், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
27 வயது நபரும், அவரின் 28 வயது மனைவியும் நீதிபதி அஹ்மாட் ஃபுவாட் ஒத்மான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
KLIA 2 இல் Q5 நுழைவாயிலில் பொது மக்கள் முன்னிலையில் சட்டையைக் கழற்றி ஆபாசமாக நடந்துக்கொண்டதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக, ஏர் ஆசியா விமான நிலையத்தில் சீனாவிற்கு செல்ல வேண்டிய அந்த தம்பதியர், விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
அத்தம்பதியர், ஆபாசமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டனர். தீர்ப்பு வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி அளிக்கப்படவிருக்கிறது. அதுவரையில் அவர்களை தலா 5 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிக்க நீதிபதி அனுமதித்தார்.