கேமரன் மலை, பிப்.15-
கேமரன் மலை வட்டாரத்தில் மோட்டார் சைக்கிள்களை திருடுவதில் தீவிரம் காட்டி வந்த கேங் குலுப் என்ற கும்பலைச் சேர்ந்த இரு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
20 வயது மதிக்கத்தக்க அந்த இரு நபர்கள், பேராக், சிம்பாங் பூலாயில் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டதாக கேமரன் மலை மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் அஸ்ரி ரம்லி தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி கேமரன் மலை, குவாலா தெர்லா, கம்போங் ராஜாவில் இரு மோட்டார் சைக்கிள்கள் களவாடப்பட்டு விட்டதாக கிடைக்கப் பெற்ற போலீஸ் புகாரைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தீவிர புலன் விசாரணையில் மோட்டார் சைக்கிள்களை திருடும் கேங் குலுப் கும்பலைச் சேர்ந்த இருவர் பிடிப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.