ஜோகூர் பாரு, பிப்.15-
ஜோகூர் பாலத்தில் சாலை நடுவே சண்டையிட்டுக் கொண்ட இரு நபர்களை போலீஸ் தேடி வருகிறது. நேற்று நடந்து இருக்கலாம் என்று நம்பப்படும் இந்த கைகலப்பு தொடர்பான காணொளி ஒன்று, சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து அந்த இரு நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் புலன் விசாரணை செய்யத் தொடங்கியுள்ளதாக ஜோகூர்பாரு செலத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ரவூப் செலாமாட் தெரிவித்தார்.
அந்த கைகலப்பை நேரில் பார்த்தவர்கள் அல்லது கைகலப்பில் ஈடுபட்டவர்களைப் பற்றி தகவல் கொண்டிருப்பவர்கள் போலீசாருடன் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.